கொழுப்பு உண்மையிலேயே இதய ஆரோக்கியத்தை பாதிக்குமா?

ByEditor 2

Jun 30, 2025

கொழுப்பு உண்மையிலேயே மனிதர்களுக்கு வில்லனா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

கொழுப்பு சத்து

பொதுவாக மனிதர்கள் பெரும்பாலான மாரடைப்பு பிரச்சனை எதிர்கொள்வதற்கு முக்கிய காரணமே கொழுப்பு என்று தான் பலரும் கூறுகின்றனர்.

இதனால் பலரும் கொழுப்பு என்றாலே அலறுகின்றனர். ஆனால் கொழுப்பு நமது உடலுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒரு பொருளாகும்.

கொழுப்பு உண்மையிலேயே இதய ஆரோக்கியத்தை பாதிக்குமா? | Cholesterol Danger Our Body Facts For Heart Health

நமது ஒவ்வொரு உயிரணுவிலும் இயல்பாகவே கொழுப்பு இருக்குமாம். செரிமான நீர்கள், ஹார்மோன்கள், வைட்டமின்  போன்றவற்றினை உற்பத்தி செய்வதில் கொழுப்பு முக்கிய பங்கு வகிக்கின்றது.

நரம்புகள் மற்றும் தசை நார்களையும் பாதுகாப்பதுடன், நமது உடம்பில் 80 சதவீதம் கொழுப்பு உடலிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றது.

கொழுப்பு உண்மையிலேயே இதய ஆரோக்கியத்தை பாதிக்குமா? | Cholesterol Danger Our Body Facts For Heart Health

நாம் உணவின் மூலம் பெறுவது வெறும் 20% மட்டுமே. நாம் அதிக கொழுப்புள்ள உணவுகளைச் சாப்பிடும்போது, உடல் தானாகவே கொழுப்பு உற்பத்தியைக் குறைத்து, அளவைச் சமநிலைப்படுத்தும்.

ரத்தத்தில் உள்ள கொழுப்பு மற்றும் உணவின் மூலம் கிடைக்கும் கொழுப்பு என இரு வகையாக கொழுப்பை பிரிக்கலாம்.

கொழுப்பு உண்மையிலேயே இதய ஆரோக்கியத்தை பாதிக்குமா? | Cholesterol Danger Our Body Facts For Heart Health

இதில், இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு அதிகரிக்கும்போது மட்டுமே இதய நோய்களுக்குக் காரணமாக அமைகிறது.

ஆதலால் கொழுப்பு என்றாலே பயப்படத் தேவையில்லை. இரத்த கொழுப்பின் அளவை சீராகப் பராமரிப்பதே இதய ஆரோக்கியத்திற்கான முக்கிய வழி என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கொழுப்பு உண்மையிலேயே இதய ஆரோக்கியத்தை பாதிக்குமா? | Cholesterol Danger Our Body Facts For Heart Health

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *