காய்ச்சல் இருக்கும்போது இளநீர் குடிப்பது பலன் அளிக்குமா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இளநீர்
பொதுவாக வெயில் காலங்கள் என்று வந்துவிட்டாலே தண்ணீர் சத்து அதிகமாக காய்கறிகள், பழங்கள், பானங்கள் என உண்பதற்கு தான் பெரும்பாலான நபர்கள் விரும்புவார்கள்.
அதிலும் இளநீர் வெயில் காலங்கள் மட்டுமின்றி அனைத்து பருவகாலங்களிலும் மக்கள் அருந்துகின்றனர். ஏனெனில் இதில் உள்ள மினரல்கள் உடம்பிற்கு தேவையான ஆற்றலை கொடுக்கின்றது.
வெப்ப காலங்களில் உடம்பில் வெப்பத்தை தனிக்கக்கூடிய பானமான இளநீர், உடம்பிற்கு தேவையான பொட்டாசியம் , சோடியம், கால்சியம் போன்ற மிரல்ஸ் மூலமாக எலக்ட்ரோலைட்ஸ் கிடைக்கின்றன.

காய்ச்சல் இருக்கும்போது இளநீர் குடிப்பது நல்லது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில் காய்ச்சல் மற்றும் வியர்வையின் காரணமாக உடம்பிலுள்ள நீர்ச்சத்து இழுப்பையும், தாது உப்புகளின் சமநிலையின்மையையும் சரிசெய்ய இளநீர் பயனுள்ளதாக இருக்குமாம்.
மேலும் இவை உடம்பை குளிர்ச்சியாக்கி வெப்பநிலையை சீராக பராமரிக்கவும் உதவுகின்றது. இதனால் அசௌகரியம் குறைந்து உடல்நலம் மேம்படுமாம்.
அதே நேரத்தில் காய்ச்சல் கடுமையாகவோ அல்லது தொடர்ச்சியாகவே இருந்தால் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று குடிக்க வேண்டும்.
அதிலும் அளவுக்கதிகமாக குடிப்பதை தவிர்க்க வேண்டும். இதிலுள்ள சோடியம் சத்து உடம்பில் அதிகமான பக்கவிளைவுகளும் ஏற்படும்.