தோள்பட்டை வலியினால் அவதியா?

ByEditor 2

Jul 1, 2025

தோள்பட்டை வலிக்கான காரணம் மற்றும் அதற்கான தீர்வுகளை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தோள்பட்டை வலி

தோள்பட்டை வலி என்பது நம்மில் பலருக்கும் வரும் ஒரு பொதுவாக பிரச்சனையாகும். நமது உடலில் அதிக அசைவுகளை கொண்டிருக்கும் ஒரு பகுதியாக தோள்பட்டை இருக்கின்றது. 

இந்த பிரச்சனை எதனால் ஏற்படுகின்றது என்பது பலருக்கும் தெரியாத காரணமாக இருக்கின்றது. தற்போது இதற்கான காரணத்தையும், சித்த மருத்துவ தீர்வையும் தெரிந்து கொள்வோம்.

தோள்பட்டை வலியினால் அவதியா? இதற்கான காரணமும், தீர்வும் என்ன? | Shoulder Pain Causes Reason Medical Solution

காரணம் என்ன?

தோளை சுழற்ற உதவும் நான்கு முக்கிய தசைகளில் ஏற்படும் காயம், பிடிப்புகள் தோள்பட்டையில் கடுமையான வலியை ஏற்படுத்தும். இதனால் கையை முதுகுக்கு பின்னே கொண்டு செல்வது, தலை சீவுவது முடியாத காரிணமாக இருக்கும்.

தோள்பட்டையைச் சுற்றியுள்ள தசைநார்கள் கிழிந்தாலோ அல்லது வீக்கம் ஏற்பட்டாலோ கடுமையான வலி ஏற்படும்.

விளையாடும் போது ஏற்படும் காயங்கள் மற்றும் விபத்துக்களால் எலும்புகள், தசைகள் அல்லது தசை நாண்களில் பாதிப்பு ஏற்பட்டால் வலி உண்டாகும்.

தோள்பட்டை வலியினால் அவதியா? இதற்கான காரணமும், தீர்வும் என்ன? | Shoulder Pain Causes Reason Medical Solution

தோள்பட்டை மூட்டினை மெதுவாக அசைய உதவும் திரவம் நிறைந்த பைகளில் வீக்கம் ஏற்பட்டாலும் வலி ஏற்படும்.

சரியாக தூங்காமலும், அதிக பாரம் தூக்குவது மற்றும் மூட்டுவலி போன்ற பிரச்சனையினால் வலி ஏற்படும்.

கழுத்து எலும்பு மற்றும் நரம்பு பிரச்சனையினால் கூட தோள்பட்டை வலி ஏற்படும் 

நரம்புப் பிரச்சனைகள்: கழுத்து எலும்பு அல்லது நரம்புகளில் ஏற்படும் பிரச்சனைகள், அல்லது மார்பு, வயிறு போன்ற பகுதிகளில் இருந்து வரும் வலிகள்கூட தோள்பட்டையில் உணரப்படலாம்.

மருந்துகள்

அமுக்கரா சூரணம் 1 கிராம், சிவனார் அமிர்தம் 200 மி.கி., முத்துச்சிப்பி பற்பம் 200 மி.கி., மற்றும் குங்கிலிய பற்பம் 200 மி.கி. இவற்றினை தினமும் மூன்று வேளை, உணவிற்கு பின்பு வெந்நீருடனோ அல்லது பாலுடனோ கலந்து சாப்பிடலாம்.

தோள்பட்டை வலியினால் அவதியா? இதற்கான காரணமும், தீர்வும் என்ன? | Shoulder Pain Causes Reason Medical Solution

அஸ்வகந்தா லேகியம் 1-2 கிராம் வீதம் காலை, இரவு இருவேளை சாப்பிடுவது நல்லது.

வெளியே வலியுள்ள இடத்தில் கற்பூராதி தைலம் அல்லது வாதகேசரி தைலம் ஆகியவற்றைத் தேய்த்து, வெந்நீரில் ஒத்தடம் கொடுப்பது நல்ல பலன் தரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *