இதயம் கனிந்த பெருநாள் வாழ்த்துக்கள்!
ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று இன்று பெருநாள் கொண்டாடும் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் எனது ஈத் முபாரக் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நாளில் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சி, அமைதி, நல்வாழ்வு, மற்றும் இறைவனின் அருள் நிறைந்ததாக இருக்கட்டும். உங்கள் பிரார்த்தனைகள்…
இலங்கையில் 12 மாவட்டங்களுக்கு அச்சுறுத்தல்!
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.
அதிகரித்து வரும் எச்.ஐ.வி தொற்று!
நாட்டிலுள்ள இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தில் 15 முதல் 24 வயதுக்கிடைப்பட்ட 115 பேருக்கு எச்.ஐ.வி தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தில்…
வைத்தியர் மீது தாக்குதல்
கேகாலை மாவட்ட பொது வைத்தியசாலையில் விசேட வைத்தியர் ஒருவரை தாக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 29 ஆம் திகதி பிற்பகல் வைத்தியசாலைக்கு முன்னால் சந்தேக நபர் வைத்தியரை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 29…
O/L வினாத்தாள்கள் மதிப்பீடு ஏப்ரல் 1ம் திகதி
2024ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை வினாத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி ஏப்ரல் (01) முதல் தொடங்கும் என்று பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வினாத்தாள்கள் 1,066 மதிப்பீட்டு மையங்களில் மதிப்பீடு செய்யப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. முதல் கட்ட வினாத்தாள்…
மியன்மாரில் இன்று மீண்டும் நிலநடுக்கம்
மியன்மாரில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மியன்மாரின் இரண்டாவது பெரிய நகரான மண்டலேயில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது.
A/L பெறுபேற்றுக்காக காத்திருந்த மாணவி மரணம்
மட்டக்களப்பு- தாழங்குடாவை சேர்ந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் அலோசியஸ் ஸ்பெக் அக்ஷனா (வயது 19) சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். இம்முறை க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றி பெறுபேற்றுக்காக காத்திருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட நோய் நிலமை காரணமாக சிகிச்சை பலனின்றி…
கனேடிய தேர்தலில் களமிறங்கும் நான்கு தமிழர்கள்
கனேடிய பொதுத் தேர்தலில் நான்கு தமிழ் பேசும் வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளனர். எதிர்வரும் ஏப்ரல் 28ஆம் திகதி கனேடிய பொது தேர்தல் நடைபெறவுள்ளது. அவர்களில் இருவர் லிபரல் கட்சி சார்பிலும் ஏனைய இருவர் கொன்சவேர்ட்டிவ் கட்சி சார்பிலும் போட்டியிடுகின்றனர். கடந்த லிபரல் அரசாங்கத்தில்…
விமான நிலைய அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த நபர்
கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 4 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (30) காலை துபாயில் இருந்து நாட்டிற்கு வந்த சந்தேக நபர், விமான நிலைய வௌியேறும்…
நாளை நோன்பு பெருநாள்
கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஹிஜ்ரி 1446 புனித ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு இன்று மாலை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றுள்ளது. இம்மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசல்…