ஜனவரி மாதம் முதல் வீதி விபத்துகள் 1842 பதிவாகியுள்ள நிலையில் அந்த வீதி விபத்துகளில் 965 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மே மாத தொடக்கத்தில் இருந்து புதன்கிழமை (14) வரை 902 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட தவறுகளால் இவ் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து விபத்துகளைக் குறைப்பதற்கான சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும், ஓட்டுநர் விழிப்புணர்வு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.