கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கி பயணித்த எரிபொருள் பௌசர் ஒன்று ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா ரதெல்ல சுற்று வீதியில் (14) மாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பௌசரின் உள்ளே 2 தாங்கிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் இருந்துள்ளது.
எரிபொருள் பௌசர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானபோது அதிலிருந்து வீதியில் வழிந்தோடிய எரிபொருளை பொதுமக்கள் வாளிகள் மற்றும் போத்தல்களில் எடுத்துச் சென்றனர்.
பின்னர் நானுஓயா பொலிஸார் இதனை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதோடு மூன்று எரிபொருள் பௌசர்கள் வரவழைக்கப்பட்டு அதிலே எஞ்சிய பெற்றோல் மற்றும் டீசலை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.