யாழ்ப்பாணத்தில் சைக்கிளில் சென்றவரை ஓட்டோ மோதியதில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நாவற்குழி, புதிய குடியேற்றத் திட்டத்தைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான அந்தோணி றில்மன் டெனிஸ் (வயது 44) என்பவரே உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை நாவற்குழி – பூநகரி வீதி வழியாக மனைவி ஒரு சைக்கிளில் முன்னே செல்ல உயிரிழந்த கணவன் பிறிதொரு சைக்கிளில் 10 மாதக் குழந்தையை முன் கூடையில் இருத்திச் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வேகமாக வந்த ஓட்டோ, சைக்கிளை மோதி தலைகீழாகப் புரண்டது.
இதன்போது குழந்தை தூக்கி வீசப்பட்ட நிலையில் சிறு காயம் ஏற்பட்ட நிலையில் தப்பித்தது.
தந்தை படுகாயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 4:30 மணியளவில் சிகிச்சை பலனன்றி உயிரிழந்தார். (a)