மொனராகலை, அத்திமலை பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்ற விபத்தில் 18 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளதாக அத்திமலை பொலிஸார் தெரிவித்தனர்.
கொட்டியாகல, வத்தேகம பிரதேசத்தை சேர்ந்த பி.எம். சாமர சந்தருவன் என்ற இளைஞனே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி, ஒரு பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதியுள்ளது.
இதில், படுகாயமடைந்த இளைஞன் உடனடியாக எதிமலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.