பதுளை-பண்டாரவெல வீதியில் திங்கட்கிழமை (24) காலை அரிசி ஏற்றிச் சென்ற லொறி ஒன்று, வீதியோரத்தை உடைத்துக்கொண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பண்டாரவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த லொறியின் சாரதி மற்றும் உதவியாளருக்கு எவ்விதமான பாதிப்பும் இல்லையென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.