தூசு படிந்தபுத்தகங்கள் வாசிக்கப்படவில்லை என்பதைச்சொல்லும்
மாசு படிந்த மனிதர்கள் நேசிக்கப்படவில்லை
என்பதைச் சொல்லும்
முதல் காரணம் பெற்றோரின் அடக்குமுறை அல்லது
அவர்கள் இல்லாதது அல்லது இருந்தும் இல்லாதது
அடுத்தது கணவன் அல்லது மணைவியின் மூர்க்கமான அணுகுமுறைகள்
தாய் தகப்பன்.கணவன் மணைவி.உறவுகள் நட்புகள்.
இந்த நாலு தூண்களின் நேசம் எனும் பசையால்தான்
மனிதன் மனிதனாக வாழ்கிறான்
வயிற்றுப் பசிக்கு உணவிலாத பிணியைவிட
அன்புப் பசிக்கு ஆதரவிலாத உயிரின் கொடுமை கொடூரமானது
அன்பும் நட்பும் பாசமும் நேசமும்தான் ஒரு குழந்தை மனிதனாகி அந்த மனிதன் மாமனிதனாகி மகாத்மாவாக
மலர பாதை போடும் உரங்கள்.
அவையில்லாத மானுடம் தன் மிருககுணத்துக்கு
ரிவர்ஸ் கியரில் பயணம் செய்வது வியப்பில்லை