குளித்த உடனே தூங்கும் பழக்கம் உள்ளதா? 

ByEditor 2

Jun 4, 2025

குளித்த உடனே தூங்கினால் ஏற்படும் விளைவுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பொதுவாக சாப்பிட்ட உடனே பலருக்கும் தூக்கம் வருவது சகஜமான ஒன்றாக இருக்கின்றது. ஆனால் இவ்வாறு சாப்பிட்ட பின்பு தூங்குவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று கூறப்படுகின்றது.

இதே போன்று குளித்த பின்பும் பலருக்கும் தூக்கம் வரும். ஆனால் குளித்த உடனே தூங்கினால் உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதை கட்டாயம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

குளித்த உடனே தூங்கும் பழக்கம் உள்ளதா? இந்த பிரச்சினைகள் வரும் ஜாக்கிரதை | Side Effects Of Sleeping After Taking Bath

குளித்த உடனே தூங்கினால் ஏற்படும் விளைவுகள்:

குளித்த உடனே தூங்கினால் அதிகப்படியான தலைவலியை ஏற்படுத்துவதுடன், தலைக்கு குளிக்கும் போது இந்த பிரச்சனை இன்னும் மோசமான விளைவை ஏற்படுத்தும். ஏனெனில் தலைமுடி ஈரமாக இருக்கும் போது உடல் வெப்பநிலை குறைவதுடன், ரத்த ஓட்டமும் பாதிக்கப்பட்டு மூளையில் அழுத்தத்தை ஏற்படுத்துவதால் தலைவலி ஏற்படுகின்றது.

குளித்த உடனே தூங்கும் பழக்கம் உள்ளதா? இந்த பிரச்சினைகள் வரும் ஜாக்கிரதை | Side Effects Of Sleeping After Taking Bath

ஈரமான தலையுடன் தூங்கும் போது சளி இருமல் மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தும். குறிப்பாக குளிர்ந்த நீரில் தலைக்கு குளிப்பது உடல்நல பிரச்சனைகளின் அபாயத்தை மேலும் அதிகரிக்கும்.

குளித்த உடனே தூங்கும் பழக்கம் உள்ளதா? இந்த பிரச்சினைகள் வரும் ஜாக்கிரதை | Side Effects Of Sleeping After Taking Bath

இதே போன்று ஈரமான தலைமுடியுடன் தூங்கினால் முடி வேர்கள் பலவீனமடைவதுடன், எளிதில் உடைந்தும் விடுகின்றது. இதனால் முடியில் இருக்கும் இயற்கையான பளபளப்பு இழக்கப்படுவதுடன், குறித்த ஈரப்பதத்தினால் உச்சந்தலையில் பாக்டீரியாக்களும் வளருமாம்.

குளித்த உடனே தூங்கும் பழக்கம் உள்ளதா? இந்த பிரச்சினைகள் வரும் ஜாக்கிரதை | Side Effects Of Sleeping After Taking Bath

குளித்த உடனே தூங்கினால் உடல் வெப்பநிலையில் குறைந்து, தசைகள் மற்றும் மூட்டுவலியை ஏற்படுத்தும். இறுதியில் நாள்பட்ட பலியாகவும் மாறுகின்றது.

குளித்த உடனே தூங்கும் பழக்கம் உள்ளதா? இந்த பிரச்சினைகள் வரும் ஜாக்கிரதை | Side Effects Of Sleeping After Taking Bath

குளித்த உடனே தூங்குவதால், செரிமான செயல்முறை மெதுவாவதுடன், வயிற்று பிரச்சனையும், அஜீரண பிரச்சனையையும் ஏற்படுத்தும்.

குளித்த உடனே தூங்கும் பழக்கம் உள்ளதா? இந்த பிரச்சினைகள் வரும் ஜாக்கிரதை | Side Effects Of Sleeping After Taking Bath

ஈரமான தலைமுடியுடன் தலையணையில் தூங்கினால், தலையணையில் பாக்டீரிய வளர்ச்சி அதிகரித்து, முகப்பரு, சரும ஒவ்வாமை மற்றும் பிற தோல் பிரச்சனை ஏற்படும்.

குளித்த உடனே தூங்கும் பழக்கம் உள்ளதா? இந்த பிரச்சினைகள் வரும் ஜாக்கிரதை | Side Effects Of Sleeping After Taking Bath

கட்டாயம் என்ன செய்ய வேண்டும்?

மேலே கூறப்பட்ட பிரச்சனைகளைத் தவிர்க்க குளித்த பின்பு தூங்குவதை தவிர்க்க வேண்டும்.

தலைமுடியை நன்றாக காய வைக்கவும். குறைந்தது ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் காய வைத்த பின்பு தூங்கவும்.

தலைமுடி நன்றாக காய்ந்தால் உடல் வெப்பநிலை சீராக இருக்கும். இதனால் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது.

எப்பொழுதும் அதிகமான தண்ணீர் குடிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு சத்தான உணவு எடுத்துக் கொள்வது அவசியமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *