தேவை முடிந்த பின் தரையில் போட்டு ஏறி மிதிப்பார்கள்..
அன்பு, பாசம், நேசம் இவைகள் உண்மை என்று நீ நம்பிக் கொண்டு இருப்பாய்!!!
எல்லாம் வேஷம் என்று உணரும் போது நீ நடுத்தெருவில் நிற்பாய்!!!
எதை நீ நிஜம் என நினைத்தாயோ அது கனவாகக் கலைந்து போகும்…
எது உன் எதிர்காலம் என்று நம்பினாயோ அது கண்ணீராய் கரைந்து போகும்..
இங்கே பொய்கள் அழகாகத் தெரியும்
போலிகள் நிரந்தரமானதாகத் தெரியும்..
நீயாகத் தெளிவடையாத வரைக்கும் எதையும் மாற்ற முடியாது…
எதுவும் மாறாத வரைக்கும் நீ ஏமாற்றப்பட்டுக் கொண்டே இருப்பாய்!!
நீ இதயத்தில் வைத்து நேசித்து நினைவுகளோடு வாழ்ந்து கொண்டு இருப்பாய்!!
ஆனால் கடைசியில் துயரங்களைப் புதைக்கும் கல்லறையாக தான் உன் இதயமும் மாறிப்போகக் கூடும்…
வேதனைகள் சில சமயங்களில் ஒரு கொடூரமான மிருகம் போல் உனக்கு உள்ளே இருந்து கர்ஜிக்கும்…
அன்பைப் போலவே ,வலியும் ஆழ் மனதிற்குள் அடையாளமே இல்லாமல் ஆழமாக ஊடுருவும்…
துயரங்களை அனுபவித்த பிறகு மகிழ்ச்சி கிடைக்கும் என்று எதிர்பார்த்தால் மயான அமைதி தான் கிடைக்கும்…
மனம் மரத்து கல்லாகிப் போன பின்பும் மறுவாழ்வு கிடைத்தாலும் அதை நிரந்தமான நிம்மதியாக உணர முடியாது..
எல்லாத் துயரங்களும் முடிவுற்றன என்று தோன்றினாலும்….
உள்ளே ஒரு கண்ணீர்க் கிணறு தோண்டப்பட்டது போல் உணர வைக்கும்..