பொதுவாகவே அனைவரும் வாழ்வில் முன்னேர வேண்டும் என்றும் இலக்குகளை அடைய வேண்டும் என்றும் தான் ஆசைப்படுகின்றார்கள்.
ஆனால் அது அனைருக்கும் சாத்தியமாவது கிடையாது. அதற்கு மிகமுக்கிய காரணம் என்னவென்று ஆராய்ந்து பார்தால் பெரும்பாலான சமயங்களின் அதற்கு பதில் சோம்பேறித்தனம் என்பதாகத்தான் இருக்கும்.

நமது வாழ்வில் முன்னேற்றத்தை தடுக்கும் மிகப்பெரும் எதிரியாக இருக்கும் சோம்பேறித்தனத்தை விரட்டியடிக்க ஜப்பானியர்கள் கையாளும் சில எளிமையாக பழக்கங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
1.தினசரி முன்னேற்றம்
இந்த முறை ஜப்பானிய மொழியில் Kaizen என்று அழைக்கப்படுகின்றது. இந்த முறையில் உடனடி மாற்றத்தை ஏற்படுத்தவதற்கு பதிலாக தினசரி வாழ்வில் சிறிய மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்து முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.

உதாரணத்துக்கு நீங்கள் அதிகம் படிக்க வேண்டும் என ஆசைப்படுகின்றீர்கள் ஆனால் சோம்பேறித்தனத்தால் அது சாத்தியமாகவில்லை என்றால், தினமும் வெறும் ஒரு பக்கத்தை தெளிவாக கற்றுக்கொள்வதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.
இவ்வாறான முயற்சி ஆரம்பத்தில் சிறியதாக இருந்தாலும் இறுதியில் மிகப்பெரும் வெற்றிக்கு காரணடமாக அமையும்.
2. வாழ்வில் அர்த்தம்
அந்த பழக்கம் இக்கிகை என அழைக்கப்படுகின்றது. புத்தகமாக வெளியான இந்த கோட்பாடு ஜப்பானியர்களின் மிகவும் பிரபலமான தத்துவமாக பார்க்கப்படுகின்றது.

சோம்பேறித்தனத்தை முற்றிலும் இல்லாமல் செய்வதற்கு நாம் செய்யும் ஒவ்வொரு விடயமும் அர்த்தத்தமுள்ளதாக இருக்கும் வகையில் பாத்துக்கொள்ள வேண்டும்.
இந்த பழக்கத்தை கடைப்பிடிப்பதால் வாழ்க்கை மொத்தமும் அர்த்தம் பொதிந்ததாக மாறிவிடுகின்றது.