பாட்டில் தண்ணீரை எத்தனை நாட்கள் சேமித்து வைக்கலாம்?

ByEditor 2

Jan 30, 2025

நாம் பருகும் தண்ணீரை பாட்டிலில் எத்தனை நாட்கள் வரை வைத்திருக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இன்றைய காலத்தில் தண்ணீர் பருகுவதற்கு பெரும்பாலும் பாட்டிலை தான் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் பாட்டிலில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை எத்தனை நாட்கள் வைத்திருக்கலாம் என்பதைக் குறித்து சுகாதார ஆய்வாளர் கருத்து தெரிவித்துள்ளார்.

குடிநீரை பாட்டிலில் நம்முடைய இடத்தின் வெப்ப சூழ்நிலையில், ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே சேமித்து வைக்க வேண்டும். நீண்ட நாட்கள் சேமித்து வைப்பது ஆரோக்கியத்திற்கு கெடுதலாகும்.

ஏனெனில் போத்தலை ஒருமுறை திறந்துவிட்டால், காற்றில் உள்ள கார்பன் டைஆக்சைடை அது இழுத்துக் கொள்ளும். அதனால் சுவை மாறிவிடும் வாய்ப்பு உள்ளது.

பாட்டில் தண்ணீரை எத்தனை நாட்கள் சேமித்து வைக்கலாம்? இந்த தவறை செய்யாதீங்க | Bottled Drinking Water How Much Days Store

பாட்டிலை திறந்து விட்டால், ஓரிரு நாட்களுக்குள் குடித்து முடித்து விடுவது நல்லது. மேலும், குடிநீர் பாட்டில்களில் வெயில் பட்டால் பாக்டீரியா வளர வாய்ப்புள்ளது.

எனவே, தினமும் குடிநீரை காலி செய்துவிட்டு, நன்றாக சுத்தம் செய்து, அதன்பின் மீண்டும் குடிநீரை நிரப்பி பயன்படுத்த வேண்டும்.

சூரிய ஒளி நேராக குடிநீர் பாட்டில் மீது பட்டால், அல்லது அதிக வெப்பம் இருக்கும் இடத்தில் இருந்தால், நுண்ணுயிர் கிருமிகள் தண்ணீரில் வளரும் வாய்ப்புகள் அதிகம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

பாட்டில் தண்ணீரை எத்தனை நாட்கள் சேமித்து வைக்கலாம்? இந்த தவறை செய்யாதீங்க | Bottled Drinking Water How Much Days Store

ஒருவேளை அதிக நாட்களுக்கு குடிநீரை சேமித்து வைக்க வேண்டும் என்ற நிலை இருந்தால், நன்றாக மூடப்பட்ட சீல் வைக்கப்பட்ட பெரிய பாத்திரங்களில் சேமித்து வைக்கலாம்.

மேலும், அந்த பாத்திரங்கள் குளிர்ந்த, இருட்டான பகுதியில் தான் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *