யூரிக் அமில பிரச்சினைக்கு காரணம்

ByEditor 2

Jan 15, 2025

தற்காலத்தில் துரித உணவுகளின் அதிகரித்த நுகர்வு மற்றும் முறையற்ற உணவுப்பழக்கங்கள் காரணமாக  பெரும்பாலானவர்கள் யூரிக் அமில பிரச்சனையால் அவதிப்படுகின்றனர்.

யூரிக் அமிலம் என்பது உடலில் பியூரின்கள் உடைக்கப்படும் போது உற்பத்தியாகும் ஒரு வகையான இரசாயனமாகும்.

உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதை மருத்துவ மொழியில் ‘ஹைப்பர்யூரிசிமியா’ எனக் குறிப்பிடுவார்கள்.

எதனால் ஏற்படுகிறது? 

யூரிக் அமிலம் பியூரின் எனப்படும் புரதத்திலிருந்து உடலில் உருவாகின்றது. அவை உடலில் தானாக உற்பத்தியாகும். இதை தவிர சில உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ளும் போதும் உடலில் யூரிக் அமிலத்தின் அளவு கணிசமாக அதிகரிக்கும்.

ப்யூரின் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வது இரத்த ஓட்டத்தில் யூரிக் அமிலம் குவிவதற்கு வழிவகுக்கும். பொதுவாக சிறுநீரகங்களால் யூரிக் அமிலம் வடிகட்டப்படுகிறது.

உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாகும் போது சிறுநீரகத்தால் வடிகட்ட முடியாமல் போகும் நிலை உருவாகும், இது உடலில் பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு காரணமாக இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 

ஆரோக்கிய பிரச்சினைகள்

உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் பட்சத்தில் , சிறுநீர் வெளியேற்றம் சரியாக நடக்காவிட்டாலும், அது இரத்தத்தில் தங்கி, மூட்டுகளிலும், மூட்டுகளைச் சுற்றியுள்ள திசுக்களிலும் படிகங்களாகத் படிய ஆரம்பித்துவிடும்.

இதனால் மூட்டுகளில் அடிக்கடி வீங்கம் மற்றும் அசைவுகள் கடினமாகுவதுமன் இது கீல்வாதம் ஏற்படுவமற்கும் காரணமான அமைந்துவிடுகின்றது. 

அதுமட்டுமன்றி அதிக உடல் எடை, முதுமை மற்றும் மரபியல் போன்றன காரணமாகவும்  யூரிக் அமில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு காணப்படுகின்றது. 

அதனை  அலட்சியப்படுத்தினால், இதயம், கல்லீரல், பித்தப்பை, சிறுநீரகம் ஆகியவற்றின் செயல்பாட்டில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.  

உடலில் யூரிக் அமிலத்தின் அளவை கட்டுப்படுத்த ஆயுள் வேத முறையில் வீட்டிலேயே செய்ய கூடிய சிகிச்சைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

ஆயுள் வேத சிகிச்சை

திரிபலா –கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய ஆற்றல் மிக்க மூலிகைகளிலிருந்து தயாரிக்கப்படும் திரிபலா, யூரிக் அமில பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கொடுக்கும். 

இதில் காணப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகள் யூரிக் அமிலத்தின் அளவை குறைப்பதில் பெரிதும் துணைப்புரிகின்றது.

தினசரி காலை வெறும் வயிற்றில் ஒரு தே.கரண்டி அளவு திரிபலா பொடியை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் யூரிக் அமில பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும். 

மஞ்சள்-  மஞ்சளில் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டிஇன்ஃபிளமேட்டரி பண்புகள் உள்ளதால், இது யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றது. 

யூரிக் அமிலம் அதிகரிப்பால் ஏற்படும் மூட்டு வலி மற்றும் வீக்கத்திற்கு நிவாரணம் பெற ஒரு கிளாஸ் சூடான பாலில் அரை டீஸ்பூன் மஞ்சளை சேர்த்து தினமும் இரவில் தூங்கும் முன்னர் பருகிவருவது சிறந்த பலனை கொடுக்கும். 

இஞ்சி மற்றும் எலுமிச்சை- எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி ஆனது அதிகப்படியான யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த உதவும். 

மேலும் இஞ்சி  வீக்கத்தை குறைப்பதில் சிறப்பாக செயலாற்றுகின்றது. இதுமட்டுமன்றி யூரிக் அமிலத்தை கட்டுக்குள் வைக்கும் ஆற்றல் இஞ்சியில் அதிகம் காணப்படுகின்றது. தினசரி உணவு மற்றும் டீயில் இஞ்சியைப் சேர்த்து குடித்து வந்தால் யூரிக் அமில பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *