நீங்கள் காதலில் இருக்கும் போதோ அல்லது திருமணம் செய்து கொண்ட பிறகோ, உங்களிடம் ஈர்ப்பு காட்டாத பெண்ணை வீழ்த்துவது சிறிய, சிறிய விஷயங்களே.. அவள் உங்கள் மீது ஈர்ப்பு காட்டாததற்கும் நீங்கள் தவறவிட்ட கீழ் காணும் இந்த சிறிய விஷயங்களே..
நீங்கள் அவளுடைய மனதை வென்றவுடன், தொடர்ச்சியாக அவளை காதலில் வைத்திருப்பது பெரிய சவால் தான். பல ஆண்களுக்கு இதைச் செய்வது கடினம். இதனால்தான் நிறைய உறவுகள்/திருமணங்கள் பாதிக்கப்படுகின்றன.
அவளுடைய இதயத்தை வென்ற பிறகும் அவளுடன் காதலுடன் தொடர்ந்து வாழ, நீங்கள் செய்யக்வேண்டிய சில சிறிய விஷயங்கள் இவை.
- அவ்வப்போது அவளை சிரிக்க வைக்கும் வழிகளைத் தேடுங்கள். அவளை புன்னகைக்க வைப்பது அவள் மனதை மீண்டும் வெல்ல ஒரு உறுதியான வழியாகும்.
- அவள் எதிர்பார்க்காத போது அவளுக்கு பரிசு கொடுங்கள்; அது அவளுடைய பிறந்த நாளாகவோ, ஏதேனும் சிறப்பான நாளாகவோ இருக்க வேண்டும் என்பதில்லை.
- அவளுக்கு இனிமையான, செல்லமான பெயர்களை சூட்டுங்கள், சில இனிமையான கண் சைகைகளைக் காட்டுங்கள், உங்கள் இருவருக்குள் அன்யோன்யம் கொடுக்கும் விஷயங்களை கற்றுக்கொள்ளுங்கள்.
- அவளுடைய தலைமுடி, உடைகள், நகங்கள், ஒப்பனை மற்றும் அவள் செய்யும் அனைத்தையும் கவனியுங்கள். பெரும்பாலான நேரங்களில் அவள் உங்களுக்காக இவற்றைச் செய்கிறாள்.
- அவள் பேசுவதை மட்டும் கேளுங்கள். அவள் சொல்வதைக் கேளுங்கள், அவள் சொல்வதை எல்லாம் கேளுங்கள். பெண்கள் கேட்கப்படுவதை விரும்புகிறார்கள், அவர்கள் சொல்வதைக் கேட்கும் ஆணிடம் எப்போதும் அடிமையாக இருப்பார்கள். “என் கணவருக்கு என்னிடம் பேச நேரமில்லை. ஆனால் அவர் நண்பர் என்னிடம் நன்றாக பேசியதால் எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது” – இந்த கதை இங்கு ஏராளம். இதற்கு நீங்கள் இடம் கொடுக்காமல் நேரம் கொடுத்து பேசுங்கள், பேசுவதை கேளுங்கள்.
- அவளுடைய புன்னகை, அவளுடைய அழகு, அவளது உடை மற்றும் எல்லாவற்றையும் பற்றிய அந்த அழகான பாராட்டுக்கள் — நீங்கள் அவளிடம் இவற்றைச் சொல்லும்போது அவள் வெட்கப்படுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது; அவள் அவற்றைக் கேட்க விரும்புகிறாள், உன்னிடமிருந்து பாராட்டுகளை கேட்க விரும்புகிறாள்.
- நீங்கள் இருவரும் எவ்வளவு காலம் ஒன்றாக இருந்தாலும், காதலனாக, கணவனாக, காதலுடன் இருக்க தவறாதீர்கள்.
- அவளைப் படியுங்கள், அவளை சிலிர்க்க வைக்கும் சிறிய விஷயங்களை தெரிந்துகொண்டு அவற்றைச் செய்யுங்கள்.
- உங்கள் வாழ்வில் அவளை மதிப்புமிக்கவளாக உணரச் செய்யுங்கள். அங்கீகாரம் உங்கள் உறவை ஆழப்படுத்தும்.
- அவள் மோசமான மனநிலையில் இருந்தாலும் அவளை சிரிக்க என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்த மனிதனாக இருங்கள்.
- அவள் உனக்காகச் செய்யும் காரியங்களை, சின்னச் சின்ன விஷயங்களைக் கூடப் பாராட்டுங்கள்.
அவளை மகிழ்விப்பது இதை விட கடினமாக இருக்க முடியாது. உங்களைப் பற்றி அக்கறை கொண்ட ஒரு பெண்ணுடன் நீங்கள் உறவில் இருக்கும் வரை, இந்த விஷயங்கள் அனைத்தும் நிச்சயமாக அவளுக்கு மகிழ்ச்சியைத் தரும்.