ஆபாச படங்களுக்கு அடிமையாகி இருப்பவர்களை எந்தெந்த அறிகுறிகளை வைத்து நாம் கண்டுபிடிக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஆபாச படத்திற்கு அடிமை
இன்றைய காலத்தில் போதைப் பொருளுக்கு அடிமையாவது போன்று ஆபாச படத்திற்கு பலரும் அடிமையாகி வருகின்றனர். இவ்வாறு ஆபாச படத்திற்கு அடிமையாவதற்கு மனநல சிகிச்சை அளிக்க வேண்டுமா? என்ற கேள்வி நம்மில் பலருக்கும் எழுந்திருக்கும்.
போதைப் பழக்கம் போன்று ஆபாச படம் பழக்கமும் மனம் மற்றும் உடல் ரீதியான தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. ஆதலால் இதிலிருந்து வெளிவருவது மிகவும் அவசியம் ஆகும்.
இதில் மோசமான நிலை என்னவெனில் ஆபாச படங்களுக்கு அடிமையாகி இருப்பவர்களுக்கு தான் அவ்வாறு இருப்பதே தெரியாமல் இருக்கின்றனர். இந்நிலையில் ஆபாச படங்களுக்கு அடிமையாகிவிட்டதை உணர்த்தும் அறிகுறிகளை தெரிந்து கொள்வோம்.
ஆபாச படங்களுக்கு அடிமையாதல் என்றால் என்ன?
சிற்றின்ப காட்சிகளுக்கு அடிமையாதல் ஏற்பட்டால் ஆபாச பொருட்களுக்கு அடிமையாதல் ஏற்படலாம். இது உங்க இயல்பு வாழ்க்கையையும் பாதிக்க வாய்ப்புள்ளது.
ஆபாச படங்களுக்கு அடிமையாதல் உங்களுக்கு நடத்தை சீரழிவை ஏற்படுத்தலாம். இது ஹைப்பர் செக்சுவல் என்று வகைப்படுத்தப்படுகிறது.
அதிகப்படியான சுய இன்பம் உங்களுக்கு பாலியல் கோளாறுகளை உண்டாக்கலாம்.
எப்போது ஆபாச போதையாக மாறும்?
ஆபாச போதை வியக்கத்தக்க வகையில் பொதுவானது; பல மருத்துவர்கள் இதை மிகை பாலியல் கோளாறு மற்றும் பாலியல் அடிமையாதல் அல்லது அதிகப்படியான சுயஇன்பம் போன்ற மனநல கோளாறுகள் என வகைப்படுத்துகின்றனர்.
ஆபாசத்தைப் பார்ப்பது தானாக ஆபாச போதைக்கு வழிவகுக்காது. இருப்பினும், ஒரு நபர் தனது நல்வாழ்வை விட ஆபாசத்திற்கு முன்னுரிமை கொடுக்கத் தொடங்கினால், அது அவர்களுக்கு உதவி தேவை என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
இலவச இணைய ஆபாசப் படங்கள் கிடைப்பதால், ஆன்லைன் ஆபாச போதை கட்டுப்படுத்தப்படாமல் விட்டால் விரைவில் மலரும்.
ஒரு நபர் ஆபாசத்தைப் பயன்படுத்துவது அவர்களின் வாழ்க்கையின் எந்த அம்சத்திற்கும் முன்னுரிமை கொடுக்கக்கூடாது.
அப்படிச் செய்தால், அவர்களின் ஆபாசப் பழக்கம் ஒரு போதையாக மாறக்கூடும் என்பதற்கான அறிகுறியாகும்.
அறிகுறிகள் என்ன?
நீங்கள் ஆபாச படங்களை அவதானிப்பதை நிறுத்துவதற்கு உண்மையாக முயற்சித்தாலும் உங்களால் நிறுத்த முடியாமல் இருப்பீர்கள். உங்களது துணையினால் இதை பார்க்க நிறுத்த முடியவில்லை என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் அதிக நேரம் இணையத்தில் செலவிடுவதுடன், நீங்கள் அவர்களை தொடர்பு கொள்ள நினைத்தாலும் அவர் உங்களை தவிர்த்து அப்படத்தையே பார்ப்பார்கள்.
மற்ற போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் போன்று, இவர்களும் அதைக் குறித்தே எந்த நேரமும் சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். அவ்வாறு அடிமையாக இருப்பவர்கள் மற்றவர்களுடன் இருப்பதை விருப்பாமல் தான் தனியாக எங்காவது மறைவார்கள். நீங்கள் கேட்கும் தருணத்தில் உங்களிடம் கோபப்படவோ, உங்களை தவிர்க்கவோ செய்வார்கள்.’
இதற்கு அடிமையானவர்கள் எதையும் சாதிக்காமல் நாள் முழுவதையும் அப்படத்தினை அவதானித்தே நேரத்தை வீணடிப்பார்கள். சோம்பேறித்தனமாகவும், எந்தவொரு காரியத்தையும் சரியாக செய்யாமல் இருப்பதுடன், வேறு எதிலும் ஆர்வம் காட்டாமலே இருப்பார்கள்.
உறவின் மீதான ஆர்வம் குறைந்துவிடும் நிலை ஏற்படும். ஏனெனில் ஆபாச படத்தினை அவதானிப்பவர்கள், தனது துணையினை குறைவான அழகுடன் காணப்படுவதாக நினைப்பதுடன், உங்களிடம் இருந்து விலகி செல்லவும் செய்வார்கள்.
படுக்கையறையில் அதிக எதிர்பார்ப்புடனும், எளிதில் விரக்தியடையவும் செய்வதுடன், துணையை அந்நியப்படுத்தவும் செய்வார்கள். இதனால் துணையின் மனநிலை மிகவும் பாதிக்கப்படும்.
ஆபாச படத்திற்கு அடிமையாகும் நபர்கள் தங்களது துணையின் தோற்றத்தை குறித்து புண்படுத்தும் விதமாக பேசுவதுடன், அவர்களின் சுயமரியாதைக்கு பெரிய சிக்கலையும் உருவாக்குகின்றது.
இதற்கு அடிமையானவர்கள் உடல் வலியை அனுபவிக்க ஆரம்பிக்கலாம். ஏனெனில் குறித்த படத்தினை அவதானிக்கும் போது உடல் அசைவுகளிலிருந்தோ அல்லது அதிகப்படியான கணினி பயன்பாட்டுடன் வரும் சிரமத்திலிருந்தோ இருக்கலாம், ஆபாசப்படத்திற்கு அடிமையானவர்கள் மணிக்கட்டு, முதுகு மற்றும் கழுத்து வலி மற்றும் தலைவலி குறித்து அடிக்கடி புகார் கூறுகிறார்கள்.
மேலும் இதற்கு அடிமையானவர்கள் பணத்தை செலவழிக்க தொடங்குவார்கள். மேலும் நிதி நெருக்கடியிலும் விழ நேரிடும், பணப் பிரச்சனைகள் குறித்து இவர்கள் புகார் அளிக்கத் தொடங்கிவிட்டால், நீங்கள் எளிதில் கண்டுபிடித்து விடலாம்.
ஆபாச படத்திற்கு அடிமையாகும் போது, குறித்த நபர் பல்வேறு அம்சங்களிலிருந்து திசை திருப்பப்படுவார்கள். அதாவது நண்பர்கள், குடும்பத்தினர், வேலை இவற்றினில் இருக்கும் போது அந்த ஞாபகத்திலேயே அவர்களின் மன எண்ணம் இருக்கும். இதனால் துணையிடமிருந்து தூரமாக இருப்பார்கள்.
இவ்வாறான நபர்கள் குறித்த படம் பார்ப்பதில் தாமதம் ஏற்பட்டால் பொறுமையை இழப்பதுடன், எரிச்சல் மற்றும் கோபத்தையும் வெளிப்படுத்துவார்கள். அதே போன்று அவர்களின் துணையையும் துன்புறுத்தவும் செய்வார்கள். முன்பு நேசித்த நபரா தற்போது இப்படி நடந்து கொள்கின்றார் என்ற சந்தேகம் எழும்பும் வண்ணம் அவர்களின் செயல்கள் மற்றும் மாற்றம் இருக்கும்.