உலகின் சிறந்த மற்றும் மோசமான எயார்லைன்ஸ் பட்டியல் வெளியீடு

ByEditor 2

Dec 6, 2024

உலகளவில் விமானச் சேவையின் செயல்திறனைப் பகுப்பாய்வு செய்து, உலகின் சிறந்த மற்றும் மோசமான விமான நிறுவனங்களை வரிசைப்படுத்தி AirHelp நிறுவனம் வருடந்தோறும் தரப்பட்டியலை வெளியிட்டு வருகிறது.

வாடிக்கையாளரின் மதிப்பீடும், சரியான நேரத்தில் வருகை மற்றும் புறப்படும் நேரம், பணியாளர்களின் சேவைத் தரம், உணவு வழங்குதல் மற்றும் பயணிகளின் வசதி ஆகிய காரணிகளை கொண்டு இந்த ஆய்வு
மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் 54 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பயணிகளின் கருத்தை பெற்று 2024 ஆம் ஆண்டின் ஏர்ஹெல்ப் அறிக்கை வெளியாகியுள்ளது.

விமான நிறுவனங்கள் திடீர் இடையூறுகளை எவ்வாறு கையாளுகின்றன, இழப்பீடு கோரிக்கைகளை எவ்வாறு நிவர்த்தி செய்கின்றன, சர்வதேச வழித்தடங்களில் நிலையான சேவையை எவ்வாறு வழங்குகின்றன உள்ளிட்ட தரவுகளும் இந்த அறிக்கைக்காக சேகரிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 109 விமான நிறுவனங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் உலகின் மோசமான 10 விமான நிறுவனங்களின் பட்டியலில் இந்தியாவின் இண்டிகோ இடம்பெற்றுள்ளது.

சிறந்த 10 விமான நிறுவனங்களின் பட்டியலில் பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் ஏர்லைன்ஸ் முதல் இடத்தில் உள்ளது. கத்தார் ஏர்வேஸ் 2 ஆம் இடம் பிடித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *