பொதுவாக சில அறிவாளிகளை பார்த்து அவர்களுக்கு உடல் முழுவதும் மூளை என அவர்களின் அறிவாற்றலை வர்ணிப்பது வழக்கம்.
ஆனால் உண்மையிலேயே உடல் முழுவதும் மூளையை கொண்ட உயிரினமொன்று இருக்கின்றது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?
ஒன்பது மூளையும், மூன்று இதயமும் கொண்ட ஒரு உயிரினத்தை நீங்கள் எப்போதாவது கற்பனை செய்ததுண்டா?
அத்துடன் அந்த உயிரினத்துக்கு குருதி நீல நிறத்தில் தான் இருக்கும். இப்படிப்பட்ட வினோதமான உயிரினமாக திகழும் ஆக்டோபஸ் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆய்வுகளின் அடிப்படையில் அதில் இரண்டு இதயங்கள் ஆக்டோபஸ் தண்ணீரில் இருந்து ஆக்ஸிஜனை உறிஞ்சும் போது அதனை செவில்களுக்கு செலுத்தும் தொழிலை மேற்கொள்கின்றது.
மூன்றாவது இதயம் ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தத்தை உடலின் ஏனைய பாகங்களுக்கு பம்ப் செய்யும் தொழிலை செய்கின்றது.
ஹீமோகுளோபின் எனப்படும் புரதத்தைக் கொண்டிருப்பதன் காரணமாகவே மனிதர்கள் உட்பட பல உயிரினங்களின் குருதி சிவப்பு நிறத்தில் காணப்படுகின்றது.
ஆனால் ஆக்டோபஸ் காப்பர் அடிப்படையிலான புரதத்தைக் கொண்டுள்ளமையால் இது ஹீமோசயனின் என்று அழைக்கப்படுகிறது. அதுவே ஆக்டோபஸூன் ரத்தம் நீல நிறத்தில் இருப்பதற்கு காரணம்.
ஹீமோசயனின் ஆக்ஸிஜனை உடல் முழுவதும் விநியோகம் செய்வதில் குறைந்த ஆற்றலுடன் செயற்படுகின்றது.
அதன் காரணமாகவே ஆக்டோபஸ்-க்கு இரத்தத்தை அதன் செவில்களுக்கு அனுப்ப இரண்டு இதயங்களும், அதை உடல் முழுவதும் விநியோகம் செய்ய ஒரு இதயமம் என மொத்தமாக மூன்று இதயங்கள் தேவைப்படுகின்றன.
அதுமட்டுமன்றி ஆக்டோபஸ்கள் ஒரு பெரிய மூளையையும் சிறிய மூளைகயையும் கொண்டுள்ளது. பெரிய மூளையானது, உடலின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்தும் ஆற்றலைல கொண்டுள்ளது.
ஆக்டோபஸூன் எட்டு கைகளில் ஒவ்வொன்றும் அதற்கென சொந்தமாக ஒரு சிறிய மூளையைக் கொண்டுள்ளன. இதன் காரணமாக ஒவ்வொரு பாகங்களும் தனித்து இயங்கக்கூடிய தன்மை இதற்கு கிமைக்கின்றது.
ஆக்டோபஸ்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சிறப்பாகவும் திறமையாகவம் செய்யக்கூடிய ஆற்றலை பெற்றுள்ளது.
இத்தகைய சிறப்பம்சங்கள் ஆழ்கடலில் ஏனைய ஆபத்தான உயிரினங்களிடமிருந்து தந்திரமாக தப்பித்துக்கொள்வதற்கு ஆக்டோபஸ்களுக்கு துணைப்புரிகின்றது.