இந்தோனேசியாவின் பாலி நகரில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ACC) பொதுக்கூட்டம் இன்று (31) நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருக்கும் ஜெய் ஷாவின் பதவிக்காலம் மேலும் 1 ஆண்டுக்கு நீட்டிக்கப்படுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ACC யின் தலைவரின் பதவிக்காலம் 2 ஆண்டுகள். அதில் தற்போது ஜெய் ஷா 2 ஆவது ஆண்டில் இருக்கிறார். இந்நிலையில் அவரது பதவிக்காலம் மேலும் 1 ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக ஜெய் ஷா நியமனம்!
