மயங்க் அகர்வால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி

Byadmin

Jan 30, 2024

ரஞ்சி கிண்ணத்தில் கர்நாடகா அணியின் தலைவராக இருக்கும் இந்திய அணியின் பிரபல வீரர் மயங்க் அகர்வால், திடீரென உடல்நிலை மோசமடைந்ததையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மயங்க் அகர்வால், ரஞ்சி போட்டியில் விளையாட்டிவிட்டு அகர்தலாவில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, விமான நிலையத்தில் விமானத்தில் ஏறியவுடன், அவருக்கு வாய் மற்றும் தொண்டையில் எரிச்சல் ஏற்பட்டுள்ளது.
இதை விமானத்தில் இருந்த அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார் மயங்க் அகர்வால். இதையடுத்து, மயங்க் உடனடியாக அகர்தலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மயங்கை சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தற்போது எந்த வித ஆபத்தும் இல்லை என்றும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மயங்க் அகர்தலாவிலிருந்து மதியம் 2.30 மணிக்கு விமானத்தை பிடிக்க வேண்டியிருந்தது. அப்போது அவர் விமானத்தில் ஏறியதும், திடீரன அவரது தொண்டையில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, மயங்க் உடனடியாக விமானத்தில் இருந்து இறக்கி, அகர்தலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மயங்க் அகர்வாலுக்கு திடீரென ஏன் இப்படி நடந்தது…? என்ன காரணம் என்ற நோக்கத்தில் விசாரணை நடத்துகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *