சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுகிறார் ரஸல்!

ByEditor 2

Jul 18, 2025

மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் அன்ரூ ரஸல். 37 வயதான இவர், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணியில் இடம் பிடித்துள்ளார். முதல் இரண்டு போட்டிகள் அவருடைய சொந்த ஊரான ஜமைக்காவில் நடைபெற இருக்கிறது. இந்த இரண்டு போட்டிகளில் விளையாடிய பின்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.

அன்ரூ ரஸல் 2019ஆம் ஆண்டில் இருந்து மேற்கிந்திய தீவுகள் அணிக்காக டி20 கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகிறார். இதுவரை 84 போட்டிகளில் விளையாடி 1,078 ஓட்டங்களை அடித்துள்ளார். 61 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கும் நிலையில், ரஸல் ஓய்வு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு பாதிப்ப ஏற்படுத்தும்.

முன்னதாக அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் தனது 29 வயதிலேயே ஓய்வை முடிவை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த்ரே ரஸல் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடியுள்ளார். 56 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1,034 ஓட்டங்களை அடித்துள்ளார். 70 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

அடுத்த தலைமுறை கரீபியன் கிரிக்கெட்டர்களுக்கு ரோல் மாடலாக இருக்கும் வகையில், எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை உயரிய நிலையில் முடிக்க விரும்புகிறேன் என ரஸல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *