தான் கிரிக்கெட்டை ஆரம்பித்த தெபவரவெவ தேசிய பாடசாலைக்கு மரியாதை செலுத்துவதாக இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் தனஞ்சய டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் தனஞ்சய டி சில்வா, தனது தந்தையையும் நினைவு கூர்ந்தார்.
தான் தனது தந்தைக்காக எப்பொழுதும் கிரிக்கெட் விளையாடுவதாகவும், இன்று அவர் இருந்திருந்தால் நான் இருக்கும் இடத்தைப் பார்த்து மகிழ்ச்சியடைந்திருப்பார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, இலங்கை அணி மற்றும் ஆப்கானிஸ்தான் அணி குறித்தும் தனஞ்சய டி சில்வா கருத்து தெரிவித்திருந்தார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் தந்தையை நினைத்து உருகிய தனஞ்சய!
