கிரிக்கெட் விளையாட்டை மிக விரைவில் மீண்டும் வெற்றிபெறும் நிலைக்கு கொண்டு வர வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (06) காலை கிரிக்கெட் இடைக்கால குழுவில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
கிரிக்கெட் இடைக்கால குழு நியமனத்தின் மூலம் 2 முக்கிய விடயங்களை சாதிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும், இடம்பெற்ற மோசடிகள் மற்றும் ஊழல்களை ஆராய்ந்து விளையாட்டை ஸ்திரப்படுத்தி விரைவாக கிரிக்கெட் விளையாட்டில் வெற்றிகளை காண்பதே இதன் முதன்மையான நோக்கமாகும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
கிரிக்கெட் இடைக்கால குழுவின் தலைவராக மிகவும் பொருத்தமானவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர், ஏனைய உறுப்பினர்களும் அவ்வாறே செய்து தமது பங்களிப்பை நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.