2023 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இன்று (06) மோதவுள்ளன.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன் படி இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.
இன்று பகல் 2.00 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகிறது.
நடப்பு உலகக் கிண்ண தொடரில் இலங்கை 7 ஆவது இடத்திலும் பங்களாதேஷ் அணி 9 ஆவது இடத்திலும் உள்ளன.
இன்று (06) இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையேயான போட்டி டெல்லியில் நடைபெற இருக்கிறது.