2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று (07) இடம்பெற்ற போட்டியில் அவுஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட்ட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு 291 ஓட்டங்களை பெற்றது.
ஆப்கானிஸ்தான் அணி சார்பாக அபாரமாக துடுப்பெடுத்தாடிய Ibrahim Zadran ஆட்டமிழக்காமல் 129 ஓட்டங்கள் எடுத்தார்.
Ibrahim Zadran 143 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகள் அடங்கலாக 129 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலிய அணி சார்பில் Josh Hazlewood 2 விக்கெட்டுகளையும், Mitchell Starc, Glenn Maxwell, Adam Zampa ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 46.5 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அவுஸ்திரேலிய அணி சார்பாக அபாரமாக துடுப்பெடுத்தாடிய Glenn Maxwell ஆட்டமிழக்காமல் 201 ஓட்டங்கள் எடுத்தார்.
Glenn Maxwell 128 பந்துகளில் 10 சிக்ஸர்கள் மற்றும் 21 பவுண்டரிகள் அடங்கலாக 201 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தான் அணி சார்பில் Naveen-ul-Haq, Azmatullah Omarzai, Rashid Khan ஆகியோர் தலா 2 விக்கெட்டையும் கைப்பற்றினர்.