நாட்டை நேசிக்கும் வீரர்களை உருவாக்குவேன் – கிரிக்கெட் இலங்கை கிரிக்கட்டை மீட்க உச்சபட்ச முயற்சிப்பேன் ; கிரிக்கட் இடைக்கால குழு தலைவர் அர்ஜுன ரணதுங்க

Byadmin

Nov 6, 2023

கிரிக்கெட்டை மீட்பதற்கு தன்னால் இயன்ற அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக கிரிக்கெட் இடைக்கால குழுவின் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கிரிக்கட் மீது தான் கவனம் செலுத்துவதாகவும், நிர்வாகம் குறித்து ஏனைய உறுப்பினர்கள் பார்த்துக் கொள்வார்கள் எனத் தெரிவித்த அர்ஜுன ரணதுங்க, கிரிக்கெட்டுக்கு புதிய வர்த்தக முத்திரையை அறிமுகப்படுத்துவதே தமது நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்.

நாட்டை நேசிக்கும் வீரர்களை உருவாக்குவதே தனது முதன்மையான பணி எனவும், தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை முறையாக நிறைவேற்றுவேன் என நம்புவதாகவும் தெரிவித்த அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தினால் வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இடைக்காலக் குழு ஒன்று நியமிக்கப்பட்டதுடன், தற்போதைய கிரிக்கெட் சபை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *