அகமதாபாத் விமான விபத்து: காரணம்

ByEditor 2

Jul 12, 2025

கடந்த ஜூன் மாதம் 12 ஆம் திகதி அகமதாபாத்தில் இடம்பெற்ற விமான விபத்து குறித்த 15 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட அறிக்கை இன்று வெளியானது. 
 
அதன்படி, விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கறுப்பு பெட்டியிலிருந்து மீட்கப்பட்ட உரையாடல்களை வைத்து விசாரணை பணியகம் ஒரு அறிக்கையைத் தயார் செய்து வெளியிட்டு உள்ளது. 

விமானம் புறப்பட்ட 32 நொடிகளில் இரண்டு இயந்திரங்களும் திடீரென பழுதானதே விபத்திற்கு காரணம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
விமானத்தின் இயந்திரங்களுக்கான எரிபொருள் விநியோகம் தடைப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. இதனால் விமானம் மேல் எழும்ப முடியாமல் விழ்ந்து நொறுங்கியுள்ளது. 
 
இதற்கிடையே, அறிக்கையில் விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே 2 விமானிகள் பேசிக்கொண்டனர் என  தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
அதன்படி, ஒரு விமானி, மற்றொரு விமானியிடம் எரிபொருள் செல்லும் வால்வை ஏன் அடைத்தீர்கள் எனக் கேட்டுள்ளார்.  அதற்கு, தான் அடைக்கவில்லை என மற்றொரு விமானி பதிலளித்திருப்பதும் விசாரணை அறிக்கையில் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *