சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு விபத்து

ByEditor 2

Jul 12, 2025

நெடுந்தீவுக்கு சென்று குறிகாட்டுவானுக்கு திரும்பிக்கொண்டிருந்த படகு ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளது.

தென்னிலங்கையைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச் சென்ற, தனியாருக்கு சொந்தமான படகு ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது.

படகில் ஏற்பட்ட இயந்திர பிரச்சினை காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இதன்போது, படகிலிருந்த பணியாளர்கள் இருவர் உட்பட 14 பேர் உயிராபத்து எதுவும் இன்றி மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சுற்றுலா படகிலிருந்து வெள்ளைக்கொடி காட்டுவதனை அவ்வழியே சென்ற நெடுந்தீவு தனியார் படகின் பணியாளர்கள் அவதானித்துள்ளனர்.

பின்னர், தனியார் படகின் பணியாளர்கள் விரைந்து செயற்பட்டு ஆபத்தான படகிலிருந்த சகல சுற்றுலாப் பயணிகளையும் பத்திரமாக தமது படகிற்கு மாற்றி மீட்டுள்ளனர்.

இதன் பின்னர் ஓரிரு நிமிடங்களில் குறித்த சுற்றுலா படகு முழுமையாக நீரில் முழ்கிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *