ஹன்சகாவுக்கு பிம்ஸ்டெக் பொதுச் செயலாளருக்கும் இடையில் சந்திப்பு

ByEditor 2

Jun 19, 2025

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சகா விஜேமுனி மற்றும் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான பிம்ஸ்டெக் (BIMSTEC) அமைப்பின் பொதுச் செயலாளர் தூதர் இந்திரா மணி பாண்டே ஆகியோருக்கு இடையே வியாழக்கிழமை (19) அன்று சுகாதார அமைச்சில் ஒரு சந்திப்பு நடைபெற்றது.

பிம்ஸ்டெக் உடன்இணைந்து செயல்படும் கீழ் பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் சுகாதாரம், தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட முக்கிய ஒத்துழைப்புத் துறைகள் குறித்து இந்த சந்திப்பு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

நாட்டின் இலவச சுகாதார அமைப்பு, அறிவியல்,தொழில்நுட்பம் மற்றும் புதுமைப் துறைகளின் முன்னேற்றத்திற்கான அரசாங்கத்தின் முன் முயற்சிகளுக்கு பொதுச் செயலாளர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்,

மேலும் மேற்கத்திய மற்றும் உள்நாட்டு மருத்துவத்துறையை மேம்படுத்தும் நோக்கில் பிம்ஸ்டெக் மற்றும் இலங்கைக்கு இடையிலான எதிர்கால ஒத்துழைப்பின் வலிமையை எடுத்துரைத்தார்.

பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான பிம்ஸ்டெக் (BIMSTEC) குழுவில் 7 நாடுகள் அடங்கும்: பங்களாதேஷ்,இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூட்டான் மற்றும் நேபாளம்.

சந்திப்பு முடிவில், பிம்ஸ்டெக் (BIMSTEC) முயற்சிகளில் அளிக்கும் ஒத்துழைப்புக்கு பொதுச் செயலாளர் தூதர் இந்திரா மணி பாண்டே மற்றும் அவரது குழுவினருக்கு அமைச்சர் டாக்டர் ஹன்சகா விஜேமுனி தனது நன்றிகளை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *