புதிய Online விசா விண்ணப்ப முறை

ByEditor 2

Jun 19, 2025

இலங்கையில் உள்ள சீனத் தூதரகம், 2025 ஜூன் 30 முதல் “சீன விசா Online விண்ணப்ப முறை” அதிகாரப்பூர்வமாகத் ஆரம்பிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. 

அறிக்கை ஒன்றை வௌியிட்டு, தூதரக செய்தித் தொடர்பாளர் ஒருவர் இந்த புதுப்பிக்கப்பட்ட புதிய விசா விண்ணப்ப நடைமுறையின் முக்கிய மாற்றங்கள் மற்றும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை எடுத்துரைத்தார். 

ஜூன் 30 முதல், விண்ணப்பதாரர்கள் தங்கள் விசா விண்ணப்பங்களை https://consular.mfa.gov.cn/VISA/ என்ற அதிகாரப்பூர்வ பக்கத்தின் மூலம் இணைவழியில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி ஒரு கணக்கை உருவாக்கி, விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து துணை ஆவணங்களையும் பதிவேற்ற வேண்டும் என தெரிவித்தார். 

விண்ணப்பம் ஆரம்ப இணையவழி மதிப்பாய்வில் தேர்ச்சி பெற்றவுடன் – பொதுவாக 1 முதல் 3 வேலை நாட்களுக்குள் – விண்ணப்பதாரர்கள் தங்கள் “சமர்ப்பிக்கப்பட வேண்டிய கடவுச்சீட்டு” நிலையைக் குறிக்கும் அறிவிப்பைப் பெறுவார்கள். 

குறித்த நேரத்தில், விண்ணப்பதாரர்கள் தங்கள் கடவுச்சீட்டு மற்றும் கைரேகைகள் போன்ற தனிப்பட்ட தகவல்களை வழங்க கொழும்பில் உள்ள சீன தூதரகத்திற்கு நேரில் செல்ல வேண்டும். இறுதி மதிப்பாய்வுக்கு மேலதிகமாக 3 முதல் 4 வேலை நாட்கள் செல்லுமெனவும் அவர் தெரிவித்தார். 

இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெறுவதற்கு விண்ணப்பதாரர்கள் https://consular.mfa.gov.cn/VISA/.htm என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட முடியும். மேலும் 0094-112676658 என்ற எண்ணை அழைப்பதன் மூலமோ அல்லது colombo@csm.mfa.gov.cn என்ற மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொள்வதன் மூலமோ தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *