ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

ByEditor 2

Jun 19, 2025

மூதூர் கட்டைபறிச்சான் விபுலானந்த வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர்,  பெளதீக வள பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு கோரி பாடசாலை மாணவர்களின் பெற்றோர் வியாழக்கிழமை (19) அன்று காலை பாடசாலைக்கு முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முக்கிய  பாடங்களைக் கற்பிப்பதற்கான  கணித, வர்த்தகம், சிங்களம்,சமயம், I.C.T,  ஆசிரியர் இன்மை, பௌதீக வளங்கள் இன்மை, போன்ற பிரச்சினைகளை சீர் செய்து தருமாறு  கல்வி நிருவாகத்தின ரிடம்  கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த ஒரு தீர்வும்  கிட்டவில்லை.

ஆதலால் குறிப்பிட்ட பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகவும் இதனை நிவர்த்தி செய்து தருமாறு கோரியே இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் சுலோகங்களை ஏந்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *