ஹஜ் பயணிகள் 250 பேருடன் வந்த விமானத்தில் தீ

ByEditor 2

Jun 16, 2025

சவூதியில் இருந்து ஹஜ் புனித பயணம் சென்றிருந்த 250 பேருடன் வந்த விமானம் 

லக்னோவில் தரையிறங்கிய போது திடீரென சக்கரத்தில் தீ புகை கிளம்பியதால் 

பதற்றம் நிலவியது.

சவூதியில் இருந்து ஹஜ் புனித பயணம் சென்றிருந்த 250 பேருடன் வந்த விமானம் லக்னோவில் தரையிறங்கிய போது திடீரென சக்கரத்தில் புகை கிளம்பியதால் பதற்றம் நிலவியது. மீட்பு குழுவினர் உடனடியாக செயல்பட்டு பிரச்சனையை சரி செய்து பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்றினர்.

உத்தரப் பிரதேசம் மாநிலம், லக்னோவில் இருந்து சவூதிக்கு ஹஜ் புனித பயணம் சென்றிருந்த 250 பேருடன் சவூதி ஏர்லைன்ஸ் விமானம் சனிக்கிழமை இரவு 10.45 மணிக்கு ஜெட்டாவிலிருந்து லக்னோவுக்கு புறப்பட்டது. இந்த விமானம் நேற்று (ஜூன்.15) காலை 6.30 மணியளவில் லக்னோவின் சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே விமானத்தின் இடது சக்கரத்திலிருந்து புகை மற்றும் தீப்பொறிகள் உருவாகியுள்ளது.

இதனை தெரிந்துகொண்ட விமானி உடனே விமானத்தை நிறுத்தி விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டிற்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அந்த விமானம் ஓடு பாதையில் இருந்து பின்னோக்கி நகர்ந்து டாக்ஸிவேக்கு சென்றது. தொடர்ந்து அங்கு வந்த மீட்பு குழுவினர் விமான சக்கரத்தில் உருவாகி இருந்த புகையை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விமானத்தில் இருந்த 250 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *