பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு

ByEditor 2

Jun 16, 2025

நேற்றையதினம் (15) லண்டனில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் திடீரென நடுவானில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

இதன் காரணமாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மீண்டும் லண்டனுக்கே திருப்பி விடப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனில் இருந்து 360 பயணிகளுடன் பிரிட்டிஷ் ஏர்வேஸ்நிறுவனத்தின் விமானம் சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. இதன்போது, நடுவானில் திடீரெனத் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

இதனை அடுத்து, புறப்பட்ட 37 நிமிடங்களிலேயே விமானம் மீண்டும் லண்டனுக்கே சென்று அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். சம்பந்தப்பட்ட பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளை கடந்தவாரம் இந்தியாவின் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஒரு விமானம் திடீரென விபத்துக்குள்ளாகி, அதில் பயணம் செய்த ஒருவரை தவிர அத்தனை பேரும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *