நீர் அருந்தியும் தாகம் எடுப்பது ஏன் 

ByEditor 2

Jun 13, 2025

நம்மில் சிலர் அதிகமான தண்ணீர் பருகினாலும் பின்பும் தாகம் எடுப்பதை அவதானித்திருப்போம். எதனால் இவ்வாறு மீண்டும் மீண்டும் தாகம் ஏற்படுகின்றது என்பதை இந்த பதவில் தெரிந்து கொள்வோம்.

நமது ஆரோக்கியத்தில் நாம் பருகும் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கின்றது. நாள் ஒன்றிற்கு இரண்டு லிட்டர் தண்ணீர் கண்டிப்பாக அருந்த வேண்டும்.

அதிலும் கோடை காலங்களில் இந்த அளவை அதிகரித்துக் கொண்டு, சரியான இடைவெளியில் தண்ணீரை பருக வேண்டும்.

அதிகமான நீர் அருந்தியும் தாகம் எடுப்பது ஏன் தெரியுமா? | Why You Feel Thirsty Even After Drinking Water

மீண்டும் மீண்டும் தாகமா?

நமக்கு தாகம் அதிகமாக ஏற்படுவதற்கு நாம் எடுத்துக் கொள்ளும் உணவு முக்கிய காரணமாகும். அதிக உப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது, உடம்பில் சோடியம் அளவு அதிகரித்து நீரை வெளியேற்றுகின்றது. இதனால் மீண்டும் மீண்டும் தாகம் ஏற்படுகின்றது.

அதிகமான நீர் அருந்தியும் தாகம் எடுப்பது ஏன் தெரியுமா? | Why You Feel Thirsty Even After Drinking Water

நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால், சிறுநீரகங்கள் அதிக நீரை வெளியேற்றுகின்றது. இவை நீரிழப்புக்கு ஆளாகி தாகத்தை ஏற்படுத்துகின்றது.

அதிகமான நீர் அருந்தியும் தாகம் எடுப்பது ஏன் தெரியுமா? | Why You Feel Thirsty Even After Drinking Water

நாம் எடுத்துக் கொள்ளும் சில மருந்து மாத்திரைகளின் தாக்கத்தினால் கூட அதிக தாகம் ஏற்படும். அதாவது அலர்ஜி, ரத்த அழுத்தம், மன அழுத்தம் இவற்றிற்கு மருந்துகள் எடுக்கையில், வாய் வறண்டு, தாக உணர்வினை ஏற்படுத்துமாம்.

அதிகமான நீர் அருந்தியும் தாகம் எடுப்பது ஏன் தெரியுமா? | Why You Feel Thirsty Even After Drinking Water

உடற்பயிற்சி மற்றும் அதிக வியர்வை காரணமாகவும், அதிகமான தாகம் ஏற்படலாம். வியர்வை மூலம் நீர் மட்டுமின்றி, உடலில் உள்ள எலக்ட்ரோலைட்டுகளும் வெளியேறுகின்றது. இதனால் தண்ணீர் மட்டும் அருந்தினால் நீர் இழப்பை ஈடு செய்ய முடியாது. எலக்ட்ரோலைட் கலந்து பானங்கள் அல்லது இளநீர் அருந்தவும்.

அதிகமான நீர் அருந்தியும் தாகம் எடுப்பது ஏன் தெரியுமா? | Why You Feel Thirsty Even After Drinking Water

மன அழுத்தம் மற்றும் பதட்டம் சில தருணங்களில் தாக உணர்வினை ஏற்படுத்தும். ஏனெனில் மன அழுத்தம் ஏற்படும்போது, உடல் பல்வேறு ஹார்மோன்களை வெளியிடுகின்றது. இதனால் உடலில் நீர் சமநிலையை இழக்கின்றது.

அதிகமான நீர் அருந்தியும் தாகம் எடுப்பது ஏன் தெரியுமா? | Why You Feel Thirsty Even After Drinking Water

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *