வாயு நெஞ்சுவலி, மாரடைப்பு நெஞ்சுவலி எவ்வாறு வேறுபடுகின்றது? 

ByEditor 2

Jun 4, 2025

மாரடைப்பு நெஞ்சுவலிக்கும், வாயு நெஞ்சுவலிக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

நெஞ்சுவலி

வாயு, மாரடைப்பு இவை இரண்டிற்கும் நெஞ்சுவலி ஏற்படலாம். ஆனால் இவற்றினை வேறுபடுத்தி பார்ப்பதில் பல குழப்பங்கள் இருக்கின்றது.

நெஞ்சுவலி ஏற்பட்டதும், இதய பிரச்சனை என்று பயப்படக்கூடாது, மேலும் நெஞ்சுவலியை அசால்ட்டாகவும் எடுத்துக் கொள்ளக்கூடாது. இவை உண்மையில் ஆபத்தானது.

வாயு நெஞ்சுவலி

வாயு பிரச்சனையால் ஏற்படும் நெஞ்சுவலி பெரும்பாலும் மேல் வயிற்றில் தொடங்கி நெஞ்சு பகுதிக்குள் பரவுகின்றது. அடிக்கடி ஏப்பம், வயிறு வீக்கம், வாயில் காற்று சிக்குவது போன்ற அறிகுறியாக இருக்கும்.

மேலும் உடலை நகர்த்தும்போது வலி மாறலாம், வெந்நீர் அல்லது சீரக நீர் குடித்தால் நிவாரணம் கிடைக்கலாம்.

வாயு நெஞ்சுவலி, மாரடைப்பு நெஞ்சுவலி எவ்வாறு வேறுபடுகின்றது? அலட்சியம் வேண்டாம் | Identify Chest Pain Gas Trouble Or Heart Attack

மாரடைப்பு நெஞ்சுவலி

மாரடைப்பால் ஏற்படும் நெஞ்சுவலி கடுமையாகவும் தொடர்ந்து நீடித்தும் இருக்கும். நெஞ்சு நெரிக்கப்படுவது போல வலிக்கும்.

வலி இடது கை, தோள்பட்டை, கழுத்து, முதுகு போன்ற பகுதிகளுக்கு பரவலாம். மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், அதிக வியர்வை ஆகியவையும் இருக்கலாம்.சில நிமிடங்களில் முதல் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் உயிரிழப்பும் கூட ஏற்படலாம்.

வாயு நெஞ்சுவலி, மாரடைப்பு நெஞ்சுவலி எவ்வாறு வேறுபடுகின்றது? அலட்சியம் வேண்டாம் | Identify Chest Pain Gas Trouble Or Heart Attack

உடற்பயிற்சி செய்யும் போது, மன அழுத்தம் அதிகமாக இருக்கும் போதும் மாரடைப்பு ஏற்படக்கூடும். சில நேரங்களில் இதயம் தவிர, நுரையீரல், உணவுக்குழாய், விலா எலும்பு போன்ற பிரச்சனைகளாலும் நெஞ்சு வலி ஏற்படலாம். 

நெஞ்சுவலி வந்தவுடன் பராமரிப்பின்றி விட்டுவிடக்கூடாது. வீட்டிலுள்ள சாதாரண நிவாரணங்களை முயற்சி செய்த பின்பும் வலி நீங்காவிட்டால், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டும்.

வாயு நெஞ்சுவலி, மாரடைப்பு நெஞ்சுவலி எவ்வாறு வேறுபடுகின்றது? அலட்சியம் வேண்டாம் | Identify Chest Pain Gas Trouble Or Heart Attack

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *