ஐ.பி.எல் கிண்ணத்தை வென்ற ஆர்.சி.பி!

ByEditor 2

Jun 4, 2025

18 ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் 18 வருடங்களுக்கு பின்னர் முதன்முறையாக ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. 

இறுப்போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி 06 ஓட்டங்களால் வெற்றிப்பெற்று இவ்வாறு கிண்ணத்தை   கைப்பற்றியுள்ளது. 

அகமதாபாத்தில் இன்று இடம்பெற்ற இறுதிப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. 

இதற்கமைய முதலில் துடுப்பாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 190 ஓட்டங்களை பெற்றுள்ளது. 

அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Virat Kohli அதிகபட்சமாக 43 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். 

பந்து வீச்சில் பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பில் Arshdeep Singh மற்றும் Kyle Jamieson தலா 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். 

இதன்படி 191 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 184 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது. 

அந்த அணி சார்பில் Shashank Singh ஆட்டமிழக்காமல் 61 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். 

பந்து வீச்சில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சார்பில் Bhuvneshwar Kumar மற்றும் Krunal Pandya தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர். 

இதற்கமைய 18 வருட காத்திருப்புக்கு பின்னர் இன்றைய தினம் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஐ.பி.எல் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *