ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் புதிய சாதனை

ByEditor 2

May 27, 2025

18ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. நடப்பு ஐ.பி.எல் தொடரில் குஜராத், பெங்களூர், பஞ்சாப், மும்பை ஆகிய அணிகள் ப்ளே ஓப் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

ஐ.பி.எல் தொடரில் விளையாடி வரும் அனைத்து அணிகளும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் (இன்ஸ்டாகிராம், எக்ஸ்) புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு வருகின்றன.

இதன்காரணமாக அணிகளின் சமூக வலைத்தள பக்கங்களை இரசிகர்கள் ஏராளமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 20 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்ற முதல் அணி என்ற சாதனையை ஆர்சிபி அணி படைத்துள்ளது.

அந்த அணிக்கு அடுத்தபடியாக 18.6 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் சிஎஸ்கே அணி 2ஆவது இடத்திலும், 18 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *