10 அணிகள் பங்கேற்றுள்ள 18ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்

ByEditor 2

May 25, 2025

10 அணிகள் பங்கேற்றுள்ள 18ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, டெல்லி அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. மீதமுள்ள லீக் ஆட்டங்கள் டொப்-2 இடம் யாருக்கு என்பதை முடிவு செய்யும்.

முதல் இரு இடங்களுக்குள் வரும் அணிக்கு இறுதிப்போட்டிக்குள் நுழைய இரு வாய்ப்பு கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்கது.

இந்த நிலையில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் 66-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகள் ஆட ஆரம்பித்தன.

இதில் நாணயசுழட்சியில் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுகளை இழந்து 206 ஓட்டங்களை பெற்றது 207 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 20 ஓவர் நிறைவில் 04 விக்கெட்டுகளை இழந்து 208 ஓட்டங்களை பெற்று வெற்றியடைந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *