ஒரு ஆணின் விந்தணு மூலம் பிறந்த 67 குழந்தைகள்

ByEditor 2

May 27, 2025

ஐரோப்பாவில் ஒரே ஆணின் விந்தணு மூலம் பிறந்த 67 குழந்தைகளில், பலருக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவரின் விந்தணுவில் கருத்தரித்த குழந்தைகளில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எட்டு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 46 குடும்பங்களைச் சேர்ந்த 67 குழந்தைகள் பரிசோதிக்கப்பட்டனர்.

மாறுபாடு 23 குழந்தைகளில் கண்டறியப்பட்டது. அவர்களில் 10 பேருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

இதில் கேன்சர் செல்களான லுகேமியா மற்றும் ஹாட்ஜ்கின் அல்லாத லிம்போமா பாதிப்பு வழக்குகளும் அடங்கும்.

இரண்டு குடும்பங்கள் தங்கள் குழந்தைகளில் புற்றுநோயின் அறிகுறிகள் கண்டறியப்பட்ட பிறகு, தங்கள் கருவுறுதல் மருத்துவமனைகளைத் தொடர்பு கொண்டபோது இது வெளிச்சத்துக்கு வந்தது.

2008 ஆம் ஆண்டு விந்தணு தானத்தின் போது இந்த பிறழ்வு நிகழ்ந்தது. “நன்கொடை அளிக்கப்பட்டபோது இந்த அரிய மாறுபாடு புற்றுநோயுடன் தொடர்புடையதாகத் தெரியவில்லை.

ஆனால் தானம் செய்தவரின் விந்தணுக்களில் சிலவற்றில் TP53 எனப்படும் மரபணு மாறுபாடு உள்ளது” என விந்தணுவை வழங்கிய ஐரோப்பிய விந்து வங்கி உறுதிப்படுத்தியது.

ஒரு டோனாரின் விந்தணுவை குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குழந்தைகளை உருவாக்க மட்டும் பயனப்டுத்த வேண்டும் என்ற விந்து வங்கியின் விதி மீறப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட டோனாரின் விந்தணுக்களைப் பெற்ற அனைத்து மருத்துவமனைகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *