37,000 பேரின் குடியுரிமையை ரத்து செய்த நாடு

ByEditor 2

May 26, 2025

குவைத் அரசு, ஒரே இரவில் 37,000 பேரின் குடியுரிமையை ரத்து செய்துள்ளது. திருமணத்தின் மூலம் குடியுரிமை பெற்ற பெண்கள் பெருமளவில் பாதித்துள்ளனர்.

பல ஆண்டுகளாக குவைத் குடிமக்களாக வாழந்து வந்த இந்த பெண்கள், ஒரே இரவிலேயே நாடற்றவர்களாக மாறியுள்ளனர். குவைத் புதிய ஆட்சி தலைவர் எமீர் ஷேக் மெஷால் அல்அஹ்மத் அல்-சபாஹ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

உண்மையான குவைத் மக்களுக்கே நாடு சொந்தம்

குவைத தலைவர் , 2023 டிசம்பரில் அதிகாரத்திற்குவந்த ஐந்து மாதங்களுக்குப் பிறகு, சட்டமன்றத்தை கலைத்ததோடு, சில அரசியலமைப்புச் சட்டங்களையும் நிறுத்திவைத்தார்.

இந்நிலையில் அதன் ஒரு பகுதியாக, “உண்மையான குவைத் மக்களுக்கே நாடு சொந்தம்” என அறிவித்து, இந்த குடியுரிமை ரத்து நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார்.

1987 முதல் திருமணத்தின் மூலம் குடியுரிமை பெற்ற பெண்கள், இரட்டை குடியுரிமை வைத்தவர்கள் மற்றும் போலியான ஆவணங்களின் மூலம் குடியுரிமை பெற்றவர்கள் இந்நடவடிக்கையில் பாதிக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *