‘அனெபல்’ பொம்மை காணாமல் போகவில்லை

ByEditor 2

May 27, 2025

ஹாலிவுட் ஹாரர் படங்களின் மிக முக்கிய திகில் படமான அனபெல் படங்களில் இடம்பெற்ற அனபெல் பொம்மையைக் காணவில்லை என்று பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அனபெல் (Annabelle) திகில் படங்கள் உலகம் முழுவதும் பிரபலமானவை. அதில் பேயாக வரும் அமானுஷ்யங்கள் நிறைந்த Annabelle பொம்மை தான் இந்த வரிசைப் படங்களின் முக்கிய கதாபாத்திரம். உலகம் முழுவதும் குக்கிராமங்கள் வரையிலும் பிரபலமாகிவிட்ட இந்த பொம்மை, அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் உள்ள ஓர் அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த பொம்மை மாயமாகிவிட்டதாக அண்மையில் ஒரு செய்தி வெளியாகி அது படுவைரலானது. கூடவே, அனபெல் பொமை காணாமல் போனதை ஒட்டி பல்வேறு கதைகளும் இணையதளங்களில் கிளம்பின. இந்நிலையில், அவை அனைத்துமே வெறும் வதந்தி என்று கூறியுள்ளார் அருங்காட்சியகத்தின் அதிகாரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *