2025 IPL இல் புதிய வீரர்களை இணைக்க அனுமதி

ByEditor 2

May 15, 2025

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்தது.

இதன் காரணமாக இந்தியாவில் நடந்து வந்த 18ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஒருவார காலம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

தற்போது போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து அணி நிர்வாகிகள், ஒளிபரப்புதாரர்கள், பாதுகாப்பு முகமைகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசனை நடத்திய இந்திய கிரிக்கெட் வாரியம் ஐ.பி.எல். போட்டி வருகிற 17-ஆம் திகதி மீண்டும் தொடங்கும் என அறிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த எஞ்சியுள்ள ஐ.பி.எல் போட்டிகளில் சில வெளிநாட்டு வீரர்கள் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மீதமிருக்கும் ஐ.பி.எல். போட்டிகளில் சில வெளிநாட்டு வீரர்கள் விளையாட மாட்டார்கள் என்பதால் மாற்று வீரர்களை இணைக்க ஐ.பி.எல். அணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது இணைக்கப்படும் வீரர்கள், நடப்பு ஐ.பி.எல். தொடரில் மட்டுமே விளையாட அனுமதிக்கப்படுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *