இன்றைய காலத்தில் பெண்கள் அவசியமாக செய்து கொள்ள வேண்டிய பரிசோதனைகளை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய வாழ்க்கை முடியில், பெண்கள் வேலை மற்றும் குடும்பத்தை சமநிலைப்படுத்தி வாழ்ந்து வருகின்றனர். ஒரு வயதுக்கு அடுத்து தங்களது உடல்நலனில் கவனம் செலுத்துவதற்கு மறந்துவிடுகின்றனர்.
இதனால் நீரிழிவு, இரத்த அழுத்தம், தைராய்டு, கால்சியம் குறைபாடு போன்ற பிரச்சனைகள் வர அதிக வாய்ப்பு உள்ளது. இதை தவிர்க்க, சில முக்கிய பரிசோதனைகளை கட்டாயம் செய்துகொள்ள வேண்டும்.

செய்து கொள்ள வேண்டிய பரிசோதனை
உடல் எடை மற்றும் உயரத்தை அடிப்படையாகக் கொண்டு பிஎம்ஐ மதிப்பினை தெரிந்து கொள்ள வேண்டும்.
ஹீமோகுளோபின் ரத்த பரிசோதனை செய்து, உடம்பில் இருக்கும் ரத்தத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

வைட்டமின் டி மற்றும் பி12 அளவுகளை சரி செய்வது அவசியமாகும். எலும்புகள் மற்றும் உடல் சக்திக்கு முக்கயமாகும்.
18 வயதிற்கு பின்பு ரத்த அழுத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
அதுவே 45 வயதைக் கடந்தவர்கள் குளுக்கோஸ் அளவை பரிசோதிக்க வேண்டும்.
உடலில் கொழுப்பு அளவு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பரிசோதனை செய்வது அவசியமாகும். ஏனெனில் இதய நோய் வராமல் தடுப்பதற்காக செய்யவும்.

மார்பகம் மற்றும் கருப்பை புற்றுநோய் பரிசோதனையை 30 வயதிற்கு பின்பு தவறாமல் செய்து கொள்ள வேண்டும்.
எலும்பின் வலிமையை பரிசோதித்து, ஆஸ்டியோபோரோசிஸ் நோயை தடுப்பது முக்கியம்.
ஒன்பதாவது பெருங்குடல் மற்றும் தோல் புற்றுநோய்களுக்கான பரிசோதனைகளும் சரியான நேரத்தில் செய்ய வேண்டும்.
ஆரோக்கியம் சிறந்த வாழ்விற்கு அடிப்படை என்பதால், பெண்கள் இதை கவனமாக மேற்கொள்ள வேண்டும்.
