பெண்களை அச்சுறுத்தும் எலும்புத் தேய்மானம்…

ByEditor 2

Apr 27, 2025

பெண்களை அச்சுறுத்தும் எலும்புத் தேய்மானம் பிரச்சனையை எவ்வாறு தடுப்பது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

எலும்பு தேய்மானம்

பொதுவாக பெண்கள் தங்களது மாதவிடாய் நிறைவிற்கு பின்பு எலும்பு தேய்மான பிரச்சனையை சந்திப்பார்கள். ஆனால் தற்போது 30 வயதிற்குள் இந்த நோயை பலரும் எதிர்நோக்கி வருகின்றனர்.

கழுத்து, முதுகு மற்றும் மூட்டு வலிகள் அதிகரிக்கின்றன. இதற்கான முக்கியக் காரணம், உடலுக்குத் தேவையான வைட்டமின் டி, கால்ஷியம் குறைவாக இருப்பதே.

அதிக நேரம் அறைகளில் இருந்தே வேலை பார்ப்பதும், ஏசி உள்ள இடங்களில் நாம் வாழ்வதும் வழக்கமாகி வருகின்றது. இதனால் சூரிய ஒளியினைக் குறைவாகவே பெறுகின்றோம்.

இதுமட்டுமின்றி தவறான உணவுப்பழக்கமும் காரணமாக இருக்கின்றது. அதாவது அதிகளவு உப்பு, நொறுக்கு தீனி, குளிர்பானங்கள் இவற்றினை தவிர்க்க வேண்டும்.

பெண்களை அச்சுறுத்தும் எலும்புத் தேய்மானம்... பிரச்சனையை தடுப்பது எப்படி? | Bone Health In Young Women Causes Importance Tips

பிரச்சனைக்கு தீர்வு என்ன?

பால், கீரை, சிறுதானியங்கள், முருங்கைக்காய், பீட்ரூட், வெண்டைக்காய் போன்றவை மிகுந்த கால்சியம் சத்துக்களைக் கொண்டுள்ளது.

அதுமட்டுமின்றி எள், கேழ்வரகு, பிரண்டை போன்றவற்றிலும் கால்சியம் அதிகமாக இருப்பதால் எலும்பு வலிமையாக இருக்க உதவுகின்றது.

மேலும் உடற்பயிற்சி, யோகா, நடைபயிற்சி, விளையாட்டு போன்றவையும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு முக்கிய பலனை அளிக்கின்றது.

இன்று இளம்பெண்கள் ஒல்லியான தோற்றத்திற்கு முக்கியத்துவம் தருகிறார்கள். ஆனால், வலுவான உடல் மட்டுமே உண்மையான அழகு என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பெண்களை அச்சுறுத்தும் எலும்புத் தேய்மானம்... பிரச்சனையை தடுப்பது எப்படி? | Bone Health In Young Women Causes Importance Tips

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *