பொரள்ளை பகுதியில் புதன்கிழமை (23) அதிகாலை பெரிய மரம் ஒன்று வேரோடு சரிந்து விழுந்த்தில் அவ்வழியாக சென்ற 7 வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் பெய்த கடும் மழை காரணமாகவே குறித்த மரம் சரிந்து விழுந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
அத்துடன், கொழும்பு வீதிகளில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மரத்தை வெட்டி அகற்றும் நடவடிக்கையில் கொழும்பு மாநகர சபையும் தீயணைப்புப் படையினரும் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


