மட்டக்களப்பில் தீ விபத்து

ByEditor 2

Apr 24, 2025

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக கோடிக்கணக்கான சேதங்கள் ஏற்பட்டுள்ளது.

இந்த தீவிபத்து இன்று அதிகாலை (24) கொக்கட்டிச்சோலை நகரில் உள்ள பிரபல வர்த்தக நிலையம் ஒன்றிலேயே ஏற்பட்டுள்ளது.

தீயில் எரிந்த பெருமளவான பொருட்கள் 

வீட்டுடன் இணைந்த வர்த்தக நிலைய தொகுதியில் தீவிபத்து ஏற்பட்ட நிலையில் அப்பகுதி மக்கள் இணைந்து வீட்டிலிருந்தவர்களை காப்பாற்றிய போதிலும் பெருமளவான பொருட்கள் தீயில் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து தீவிபத்தினை கட்டுப்படுத்துவதற்காக மட்டக்களப்பு மாநகரசபையின் தீயணைப்பு பிரிவும் கொக்கட்டிச்சோலை இராணுவ முகாம் இராணுவத்தினரும் பொலிஸாரும் உதவிய நிலையில் தீ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலு ம் தீ ஏற்பட்டமைக்கான காரணம் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *