விபத்தில் இளம் தம்பதி பலி

ByEditor 2

Apr 21, 2025

தம்புள்ளையில் சம்பவித்த கோர விபத்தில் இளம் தம்பதி உயிரிழந்த நிலையில், மகன் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தம்புள்ளை – குருநாகல் வீதியின் பெலிகமுவ பகுதியில் இன்று (21) காலை விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெஹியத்தகண்டிய பகுதியை சேர்ந்த 30 மற்றும் 28 வயதுடைய கணவன், மனைவி உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

தம்பதி பலி

குடும்பமாக மோட்டார் சைக்கிளில் சென்ற வேளையில், குறுக்காக வந்த நாயில் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மூவரும் கலேவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி தம்பதி உயிரிழந்துள்ளனர்.

படுகாயம் அடைந்த மகன் மேலதிகச் சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *