அஞ்சல் வாக்குச் சீட்டுகள் விநியோகம்

ByEditor 2

Apr 17, 2025

மே மாதம் 5ஆம் திகதி நடாத்தப்படவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான அதிகார சபைகள் தேர்தலுக்காக, ஏப்ரல் 7, 10 மற்றும் 15 ஆம் திகதிகளில், 415,937 அஞ்சல் வாக்குச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன என  தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதனைத் தவிர, 2025.04.21 ஆந் திகதி 112 உள்ளூராட்சி மன்றங்களுக்காக  232,558 அஞ்சல் வாக்குச் சீட்டுக்கள் விநியோகிக்கப்படவுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளது.

வாக்கெடுப்பு நடாத்தப்படுவதற்குரிய 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் உரியவாறு அனைத்து வாக்காளர்களுக்கும் விநியோகிப்பதற்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் 2025.04.16 ஆந் திகதி அஞ்சலகங்களுக்குக் கையளிக்கப்பட்டுள்ளன.

 எதிர்வரும் நாட்களில் அந்த வாக்காளர் அட்டைகள் வீடுகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளது எனவும், 2025.04.29 ஆத் திகதியன்று வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாவிடின், தமது வதிவிடத்திற்குரிய தமது வாக்கு பதிவு செய்யப்பட்டுள்ள பிரதேசத்திற்குரிய அஞ்சல் அலுவலகத்திற்குச் சென்று அது பற்றி விசாரிக்க முடியுமெனவும்  தேர்தல்கள் ஆணைக்குழு தவிசாளர், ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *