இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் வரை காலணி அணிய மாட்டேன் என 14 வருடமாக கூறி வந்த ஹரியானா மாநிலம் கைதாலைச் சேர்ந்த ராம்பால் கஷ்யப்பை மோடி சந்தித்துள்ளார்.
மோடி, பிரதமாக மாறி தன்னை சந்திக்கும் வரை காலணி அணிய மாட்டேன் என அவர் சபதம் எடுத்திருந்தார்.
இறுதியாக மோடி மற்றும் ராம்பால் கஷ்யப் ஆகிய இருவரும் யமுனாநகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் சந்தித்தனர்.
பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ ‘X’ மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளில் வெளியிடப்பட்ட இந்த சந்திப்பின் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
இந்த சந்திப்பின் போது, மோடி, கஷ்யப்பிற்கு ஒரு புதிய ஜோடி ஸ்னீக்கர் சப்பாத்து ஒன்றை பரிசளிப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.
மேலும், அவற்றை அணிய அவருக்கு சிறிது நேரம் மோடி உதவுவதையும் அவதானிக்க முடிந்துள்ளது.
“ராம்பால் ஜி போன்றவர்களால் நான் தாழ்மையுடன் இருக்கிறேன், அவர்களின் அன்பையும் ஏற்றுக்கொள்கிறேன்” என மோடி தனது ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.